Publish Date: Thu, 14 Mar 2024 (09:30 IST)
Updated Date: Thu, 14 Mar 2024 (09:32 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்றைய வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது என்றும் குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் 96 ஆயிரம் கோடி சரிந்தது என்றும் செய்திகள் வெளியானதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பங்குச்சந்தை சரிவில் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 42 புள்ளிகள் சரிந்து 72,647 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதே போல் தேசிய பங்கு சந்தை 21,984 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை மீண்டு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ,ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Siva
Publish Date: Thu, 14 Mar 2024 (09:30 IST)
Updated Date: Thu, 14 Mar 2024 (09:32 IST)