Publish Date: Thu, 07 Mar 2024 (11:08 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (11:11 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 50 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 74 ஆயிரத்து 138 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 23 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 22,496 யார் என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
பங்குச் சந்தை இன்று பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் தான் வர்த்தகம் நடைபெறும் என்றும் அடுத்த வாரம் பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது