மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 60,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் 825 புள்ளிகள் உயர்ந்து 59,764.79 என்ற புள்ளிகளை தொட்டது.
ஆனால் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60,000 புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியது.