வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி..300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?

Siva
திங்கள், 30 ஜூன் 2025 (11:32 IST)
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் ஈட்டினர். ஆனால், இந்த வாரத்தின் முதல்நாளான இன்று  பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிந்து 83,757 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 25556 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில், இந்துஸ்தான் லீப்ச்ட், ஜியோ ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, ஓ.என்.ஜி.சி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
ஆனால், அதே நேரத்தில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி. உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments