Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் தங்கம் விலை.. 10 நாட்களில் 2500 ரூபாய் குறைவு.. இன்னும் குறையுமா?

Siva
திங்கள், 30 ஜூன் 2025 (11:26 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.2,500-க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு சவரனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று குறைந்தாலும், சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும், கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில்தான் வெள்ளி விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைக் காண்போம்.
 
 சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,930
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,915
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,320
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,742
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,725
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,936
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  77,800
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.119.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.119,000.00
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments