Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்கள்..!

Siva
திங்கள், 3 மார்ச் 2025 (09:41 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது. இந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் சற்று உயர்ந்திருப்பது திருப்தியை அளித்தாலும், மதியத்திற்கு மேல் மீண்டும் பங்குச்சந்தை சரிவில் செல்லுமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து 73,341 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 49 புள்ளிகள் உயர்ந்து 22,175 புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் வர்த்தகம் நேர்மறையாக தொடங்கியிருந்தாலும், அதன் பிறகு மதியத்திற்கு மேல் மீண்டும் சரிவடைந்ததால், இந்த சிறிய ஏற்றத்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையில்லாமல் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் இன்போசிஸ், எச்.சி. எல். டெக்னாலஜி, பாரதி ஏர்டெல், டி.சி.எஸ், ஐ.டி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சன் பார்மா, டைட்டன், கோடக் மகேந்திரா வங்கி, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், ஸ்டேட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments