3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
வியாழன், 4 டிசம்பர் 2025 (09:56 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு மூன்று நாட்களாக சரிவில் இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தரும் வகையில் இன்று பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.
 
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 85,251 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதே போல் தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 26,022 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, மாருதி, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
 
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டிகோ, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகம் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments