நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 18 நவம்பர் 2025 (09:28 IST)
நேற்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இன்று திடீரென பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவில் உள்ளது என்பதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178 புள்ளிகள் சரிந்து 84,769 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதே போல், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 25,966 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், மேக்ஸ் ஹெல்த் போன்ற ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளது என்பதும், மற்ற நிஃப்டி பங்குகள் அனைத்தும் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருப்பதியில் தங்கும் அறைகள் என போலி விளம்பரம்.. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த பக்தர்கள்..!

மதினாவில் 42 இந்தியர்கள் விபத்தில் பலி.. தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

SIR பணிகளுக்கு வருவாய் துறை ஊழியர்கள் வரவில்லை.. புறக்கணிப்பு நடவடிக்கையால் பரபரப்பு..!

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

அடுத்த கட்டுரையில்
Show comments