Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

Siva
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (10:01 IST)
இந்திய பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 26% வரி விதித்ததை அடுத்து, பங்குச்சந்தை நேற்று சரிந்ததைப் போல் இன்றும் சரிந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல், முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய முதல் சரிவிலேயே வர்த்தகமாகி வரும் நிலையில், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 628 புள்ளிகள் சரிந்து 75,683 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 245 புள்ளிகள் சரிந்து 23,002 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, நெஸ்லே இந்தியா உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன. 
 
ஆனால் அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஏஷியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, HCL டெக்னாலஜீஸ், ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments