டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (19:18 IST)
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் மிகப்பெரிய அளவில் சரிந்து கொண்டே சென்ற நிலையில் டிரம்ப் அறிவித்த சில குழப்பமான அறிவிப்புகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.
 
இதனால் இந்திய ரூபாய் உள்பட பல நாடுகளின் கரன்சிகள் எழுச்சி பெற்றன என்பதும் தொடர்ச்சியாக சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து அமெரிக்காவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று வர்த்தகர்கள் கூறி வருகின்றனர்
 
இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக தனது மதிப்பை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தி இன்று  27 காசுகள் அதிகரித்து ரூ.85.37 ஆக பதிவாகியுள்ளது. இந்த உயர்வு, உள்நாட்டு பங்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வரத்து போன்ற காரணிகளின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது.
 
அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.48 இலிருந்து வர்த்தகத்தை தொடங்கி, அதிகபட்சமாக ரூ.85.31 என பதிவு செய்யப்பட்டு, பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.62 ஐ தொட்டது. இறுதியில், 16 காசுகள் அதிகரித்து ரூ.85.37 ஆக முடிவடைந்தது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments