கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டாலும், பங்குச்சந்தையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதும், வழக்கம்போல் ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்றும் பங்குச்சந்தை மிகச் சிறிய அளவில்தான் சரிந்து உள்ளது என்றும், இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 60 புள்ளிகள் சரிந்து 80,687 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 31 புள்ளிகள் மட்டுமே சரிந்து 24,384 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், டாட்டா ஸ்டீல், சன் பார்மா, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், எச்.டி.எஃப்சி வங்கி, சிப்லா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.