Publish Date: Sat, 24 Dec 2022 (11:01 IST)
Updated Date: Sat, 24 Dec 2022 (11:16 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608க்கு விற்பனை.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்…
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608க்கு விற்பனையாகிறது. அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,076-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கமட்டுமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.00-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை அடுத்தடுத்து வரும் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.