Publish Date: Thu, 18 Nov 2021 (17:07 IST)
Updated Date: Thu, 18 Nov 2021 (17:33 IST)
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,635க்கு ஒரு சவரன் ரூ.37,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து சவரன் ரூ.37,072-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,634-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.37,072-க்கும் விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது மாலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,635க்கு ஒரு சவரன் ரூ.37,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.