தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, சமீபத்தில் ஒரு கிராம் ₹10,000-க்கு மேல் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹90-ம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹720-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்வை போலவே, வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு ₹2,000 என உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம், சாதாரண மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரம் குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,060
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,150
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 80,480
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,974
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 87,792
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 140.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 140,000. 00