தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் 66 ஆயிரம் ரூபாய் என உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாயும் ஒரு சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,250 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய் 66,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9000 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 113.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 113,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது