Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 1000 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை.. ஒரு சவரன் 62 ஆயிரத்தை நெருங்கியது..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (09:55 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு சவரனுக்கு 1000 ரூபாய் அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி நகைப் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்றைய விலையில் இருந்து இன்று தங்கம் ஒரு கிராமுக்கு 120 ரூபாயும் ஒரு சவரனுக்கு 960 ரூபாயும் உயர்ந்துள்ளது என்பதும் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 120 ரூபாய் உயர்ந்து    7,730 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 960 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   61,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,432 எனவும் ஒரு சவரன் ரூபாய் 67,456 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments