Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் பயணிகள் விமானம் விபத்து.. பயணம் செய்த அனைவரும் பலி.. அதிர்ச்சி தகவல்..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (09:50 IST)
அமெரிக்காவில்  நேற்று முன் தினம் பயணிகள் விமானம், ராணுவ பயிற்சி  ஹெலிகாப்டருடன் மோதிய விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேர் மற்றும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த  64 பேர் என மொத்தம் 67 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு மிக அருகே உள்ள ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென பாதை மாறியதாகவும் அப்போது 64 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஹெலிகாப்டர் மீது மோதியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விபத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் தற்போது விமானத்தில் பயணம் செய்த 64 பேர் மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேர் என்ன மொத்தம் 67 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுதான் என்றும் இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தின் முதல் கட்ட விசாரணையில் மோதல் நடந்த போது ரீகன் விமான நிலைய கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒருவர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்றும் அதனால் தான் இந்த விமான விபத்துக்கு காரணமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமிக்கு திரும்பாத சுனிதா வில்லியம்ஸ்! விண்வெளியில் படைத்த புதிய சாதனை!

புதிய பாம்பன் பாலத்தில் இன்று கப்பல் கடக்கும் சோதனை! - திறப்பு விழா எப்போது?

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments