Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ரூ.72,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்வு..!

Advertiesment
Gold

Siva

, செவ்வாய், 27 மே 2025 (10:17 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக குறைந்து கொண்டே வந்தது என்பதையும் பார்த்தோம்.
 
ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 45 ரூபாயும் ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு சவரன் ரூ.72,000ஐ நெருங்கிவிட்டது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கடந்த சில நாட்களாக வெள்ளியின் நிலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,950
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,995
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,960
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,764
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,812
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,112
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   78,496
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00
 
Edited by Siva
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர் பாகிஸ்தானில் இருந்து வந்தவரா? கலெக்டரை பார்த்து கேள்வி எழுப்பிய பாஜக பிரபலம்..!