தங்கத்தின் விலை கடந்த ஐந்து நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் அதிரடியான உயர்ந்துள்ளது.
22 காரட் தங்கம்: ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, அதன் விலை ரூ.11,630-ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் விலை ரூ.1,360 உயர்ந்து, ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,630க்கு உயர்ந்து ஒரு சவரன் விலை 101,496 என விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் இன்று திடீரென அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.172-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,72,000-ஐ எட்டியுள்ளது.
தங்கத்தின் இந்த தொடர்ச்சியான உயர்வு, முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமானிய மக்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.