உயரும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் தெரியுமா?

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (11:25 IST)
தீபாவளிக்கு பிறகு குறைய துவங்கி வந்த தங்கத்தின் விலை இன்று இரண்டாவது நாளாக ஏற்றத்தை கண்டுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. 
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. 
 
ஆம், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்ந்து 4,574-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனநாயகனுக்கு சப்போர்ட் பண்ணும் ராகுல்!.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகுமா?...

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் - தேதியை அறிவித்த துரைமுருகன்!..

இன்னைக்கு காலையிலதான வந்தாரு!.. அதுக்குள்ள அடுத்த சம்மனா?!.. சிபிஐ அதிரடி!...

சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?.. அடுத்த விசாரணை எப்போது?.. தவெக நிர்மல் குமார் பேட்டி!..

பெற்றோரை கைவிட்டால் சம்பளத்தில் 15% கட்! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments