கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு! – அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (11:03 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்குப்பதியப்படும் என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி தென் தமிழக நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் நாளை பாம்பன் – கன்னியாக்குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குமரியில் கடலுக்குள் சென்ற மீனவர்களை திரும்ப வரவும் உத்தரவிடப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 1000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் சென்றிருந்த நிலையில் 700க்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் குளச்சல் பகுதியில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக அப்படி அறிவிக்கப்பட்டதா என்ற குழப்பம் நிலவியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments