இந்திய பங்குச் சந்தை உள்பட உலக பங்குச் சந்தைகள் இன்று படு பாதாளத்திற்கு சென்று உள்ள நிலையில் தங்கம் விலை கெத்தாக உள்ளது என்றும் ஒரு கிராமத்து வெறும் 25 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 8,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 சென்னையில் ரூபாய் 66,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,038 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,304 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது