Publish Date: Thu, 27 Feb 2025 (11:17 IST)
Updated Date: Thu, 27 Feb 2025 (11:18 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளதாகவும் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 8,010 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 320 குறைந்து ரூபாய் 64,080என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,738எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,904 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது