Publish Date: Fri, 20 May 2022 (10:11 IST)
Updated Date: Fri, 20 May 2022 (10:10 IST)
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 248 ரூபாய் உயர்ந்து 38,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 65.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.