Publish Date: Wed, 23 Jun 2021 (10:24 IST)
Updated Date: Wed, 23 Jun 2021 (10:26 IST)
கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.40-க்கு விற்பனையாகிறது.