Publish Date: Mon, 04 Nov 2024 (11:46 IST)
Updated Date: Mon, 04 Nov 2024 (11:48 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு சவரன் 60 ஆயிரத்தை நெருங்கியது, ஆனால் அதன் பின்னர் தங்கம் விலை மீண்டும் சரிந்து 59 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 7370 என்றும், ஒரு சவரன் தங்க நகை 58,196 என்றும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக எந்தவிதமான மாற்றமும் இன்றி ஒரே விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 7875 என்றும், ஒரு சவரன் 63 ஆயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை போலவே வெள்ளி விலையிலும் மாற்றமில்லை என்பதும், ஒரு கிராம் 106 ரூபாய் எனவும், ஒரு கிலோ 1,06,000 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை கடந்த நான்கு நாட்களாக விலையில் மாற்றம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.