Publish Date: Wed, 30 Oct 2024 (10:04 IST)
Updated Date: Wed, 30 Oct 2024 (10:06 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சவரன் தங்க நகை 59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 65 ரூபாயும் ஒரு சவரனுக்கு 520 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,440 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய் 59,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,945 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது