கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று சிறிய அளவில் சரிந்தது. அதேபோல், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்துள்ளது என்பது தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பின்னடைவாகும்.
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ. 160 குறைந்துள்ளது. இருப்பினும், இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 96,000 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 4-ம், ஒரு கிலோவுக்கு ரூ. 4,000-ம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்து பார்ப்போம்,
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,020
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 12,000
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,160
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,100
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,113
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,091
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,904
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,728
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 196.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 196,000.00