Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
செவ்வாய், 28 ஜனவரி 2025 (11:51 IST)
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கம் விலை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 30 ரூபாயும் ஒரு சவரன் 240 ரூபாயும் குறைந்து உள்ள நிலையில் இன்னும் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய்   7,510 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய்  60,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8192 எனவும் ஒரு சவரன் ரூபாய் 65,536 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு.. சென்னையில் ஒருவர் கைது.. என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை..!

திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள்: சீமான்

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!

காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments