Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்டு பிரசாதம் வாங்க வரிசையில் நின்ற 7 பேர் பலி.. 40க்கும் மேற்பட்டோர் காயம்.. உபியில் சோகம்..!

Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (11:42 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் லட்டு பிரசாதம் வாங்க வரிசையில் இன்று ஏழு பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பேக்பாட் என்ற மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவின் முடிவில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் இந்த லட்டை வாங்க ஏராளமான பேர் ஒரே நேரத்தில் முண்டியடித்தனர்.

இதில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 40 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பலியான ஏழு பேரின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடமும் நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு.. சென்னையில் ஒருவர் கைது.. என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை..!

திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள்: சீமான்

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!

காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments