Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
செவ்வாய், 14 ஜனவரி 2025 (10:45 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று பொங்கல் தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாய், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து, பொங்கல் தினத்தில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் 100 ரூபாய்க்கு மேல் ஒரு கிராமுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய்   7,330 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய்  58,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,996 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,968 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் முடிந்து சென்னை திரும்ப முன்பதிவில்லா சிறப்பு ரயில்! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

விழுப்புரம் அருகே திடீரென நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்: பயணிகள் அவதி..!

அஞ்சல் துறை அறிவித்துள்ள கடிதம் எழுதும் போட்டி.. கடிதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு..!

ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு: பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்..!

சனாதனத்தை நிலைநாட்ட.. பிராமணர்கள் அதிகம் குழந்தை பெற்றெடுத்தால் பரிசு! - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments