திடீரென குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.10,000க்குள் ஒரு கிராம் தங்கம் விலை..!

Siva
திங்கள், 8 செப்டம்பர் 2025 (09:39 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சமீபத்தில் ஒரு கிராம் ரூ.10,000க்கும் அதிகமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.10,000க்குள் என்ற நிலையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், ஒரு சவரனுக்கு ரூ.280-ம் குறைந்துள்ளது. தங்கத்தைப்போலவே வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்,
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,005
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,970
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 80,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 79,760
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,914
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,876
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 87,312
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  87,008
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.137.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.137,000.00
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments