Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவபெருமானின் உடல் முழுவதும் விபூதி பூச காரணம் என்ன...?

Advertiesment
சிவபெருமானின் உடல் முழுவதும் விபூதி பூச காரணம் என்ன...?
சிவபெருமான் இந்து மதத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார். மற்றக் கடவுள்கள் போல் அல்லாது உடல் முழுவதும் சாம்பல் பூசி மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படுபவர் சிவன்.
தன் இடுப்பைச் சுற்றி இடது தோள்பட்டை வரை புலித்தோல் ஆடை, கழுத்தை சுற்றி பாம்பு, ஜடாமுனியில் அரை நிலவு, திரிசூலம் மற்றும் உடல் முழுவதும்  பூசப்பட்ட சாம்பல் உடன் நமக்கு காட்சியளிக்கின்றார்.
 
மனிதர்களின் பிறப்பு மற்றும் வாழ்விற்கு பொறுப்பான பிரம்மா மற்றும் விஷ்ணுவை போல் அல்லாமல், அவர்களை அழிக்கும் கடவுளாக உள்ளார் சிவன். அவர் உடலில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் விடாமுயற்சி, அமைதி, பயம், நேரம் மற்றும் காமம் ஆகியவற்றை வெல்வதைக் குறிக்கும்.
 
இதேபோன்று இவர் உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள சாம்பல் முதன்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது இறந்தவர்களுடன் ஆத்ம ரீதியான  தொடர்பைக் கொண்டுள்ளது. இறந்த பிறகு எஞ்சியிருப்பது சாம்பல் மட்டுமே, சிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்வதனால், இறந்தவர்களின் தூய்மையை பறைசாற்றும்.இந்த சாம்பல் உணர்ச்சிகள், காமம், பேராசை மற்றும் பயம் போன்ற பூலோக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது.
 
இவர் சாம்பலை உடல் முழுவதுமாய் பூசிக் கொள்வதற்கு காரணம் ஒரு புராண கதையொன்றில் கூறப்பட்டுள்ளது. அதில்,ஆதிசக்தியின் அவதாரமான மற்றும் தன்  முதல் மனைவியுமான சதி, தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்ட போது, சிவபெருமானால் தன் ஆத்திரம், வலி மற்றும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரின் பிணத்தை எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் ஓடினார்.
 
அப்போது விஷ்ணு பகவான் சதியின் பிணத்தை தொட்டவுடன் அவர் சாம்பலாகி போனார். தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத சிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டார். இதனால் தான் சிவன் சாம்பல் நிறத்துடையான் என்று போற்றப்படுகின்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவபெருமான் அஷ்டோத்திரம் - 108 போற்றி...!!