Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவனுக்குரிய விரதங்களில் சிறப்பானது மாக சிவராத்திரி!

சிவனுக்குரிய விரதங்களில் சிறப்பானது மாக சிவராத்திரி!
இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாக கடைபிடிப்பது மகா சிவராத்திரி. இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி  மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக்  கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

 
சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன்  மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு  நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.
 
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை  விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது.  யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
 
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச்  சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல்  பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.
 
ஐந்து வகையான சிவராத்திரி:
 
1. நித்திய சிவராத்திரி 
2. மாத சிவராத்திரி
3. பட்ச சிவராத்திரி
4. யோக சிவராத்திரி
5. மாக சிவராத்திரி
 
மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரியாகும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு  பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை  செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவுருவம் ஏழு அடி உயரம் கொண்ட வல்லக்கோட்டை முருகன் கோயில்!