Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவுருவம் ஏழு அடி உயரம் கொண்ட வல்லக்கோட்டை முருகன் கோயில்!

திருவுருவம் ஏழு அடி உயரம் கொண்ட வல்லக்கோட்டை முருகன் கோயில்!
வல்லக்கோட்டை முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில்  12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும்.

 
இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன்  திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும்.
 
இலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். இந்த மன்னனை காண  நாரத முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ நாரதரை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அருகிலிருந்த வனத்திற்கு சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் வந்து கொண்டிருந்தான். அவனை கண்ட நாரதர், பகீரதனின் ஆணவத்தை அடக்க இவன் தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். பின்  அவனிடம் தானே வலிய செறு, கோரனே! நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இலஞ்சி நாட்டை வென்றால்  தான் உனது திக் விஜயம் நிறைவுபெறும், என்று தனக்கே உரித்தான பாணியில் சிண்டு முடித்து விட்டார்.
 
அசுரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். பகீரதனை போரில்  வென்றான் அசுரன். நாடு நகரம் என அனைத்தும் இழந்த மன்னன் காட்டிற்கு சென்றான். அங்கு நாரத முனிவர் இருந்தார்.  அவரிடம் சென்று கெஞ்சினால் நல்வழி காட்டுவார் என கூறி சென்று விட்டார். 
 
பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டான். பின் ஒரு வழியாக திர்வாச முனிவரை தேடிக் கண்டு  பிடுத்து அவரடம் தன் நிலையைக் கூறி நாட்டல் மீட்க வழி கேட்டு மன்றாடினான், துர்வாசர் அவனிடம், வெள்ளிக்கிழமைகளில்  விரதம் இருந்து இங்குள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்  என்று கூறிச்சென்றார். இவனும் துர்வாசர் கூறியபடி முருகனை வழிப்பட்டான். சிறிது காலம் கழித்து முருகனுக்கு அவனே ஒரு  கோயிலும் கட்டி வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்தான். இவன் கட்டிய கோயில் தான் வல்லக்கோட்டை சிப்பிரமணியர் கோயில்.
 
முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய்க் கிழமையிலும் சஷ்டி திதியிலும், கார்த்திகை நட்சத்திர நாளிலும் இங்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஆடிக்கிருத்திகை அமர்க்களமாக நடைபெறும். கிருத்திகை விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து, முருகப்பெருமானுக்கு பால் குடம் எடுத்தும் காவடிகள் எடுத்தும் வருவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்