Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ 3 பேரால் ’நாட்டு மக்களுக்குத் தொல்லை - ஸ்டாலின் கிண்டல்

Advertiesment
Still
, வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:11 IST)
தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருபெரும் திராவிட தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். தங்களை யார் எனக் காட்டுவதற்கும் அதேசமயம் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென உழைத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது :
 
கருணாநிதியையும், பெரியாரையும் இணைத்த ஊர் புதுச்சேரி.
 
கருப்பு பணத்தை  மீட்டு ரூ.15 லட்சம் போடுகிறேன் என மோடி கூறினாரே செய்தாரா ?என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும் நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய மூன்று பேரால் மக்களுக்குத் தொல்லை.
 
மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் வரும் ஆனா வராது !அதனால் இனிமேல் மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழுகாச்சி அஸ்திரத்தை கையிலெடுத்த அன்புமணி: தருமபுரி கதறல்...