Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி ஒரு கதாநாயகன்...மோடி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்... மோடி ஒரு மல்யுத்த வீரர்.... அமைச்சர் பொளேர்!!!

Advertiesment
அமைச்சர்
, வியாழன், 28 மார்ச் 2019 (08:21 IST)
இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
 
அதிமுக அமைச்சர்கள் சிலர் எப்பொழுதும் மோடியையும் பிஜேபியையும் ஓவராக புகழ்வர். அந்த லிஸ்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு ஆகியோர் பரவசப்பட்டு புல்லறிக்கும் படி புகழ்வர். ஆனால் மோடியையும், பிஜேபியையும் தேர்தலுக்கு முன்னர் கழுவி ஊற்றிய எம்.பி தம்பிதுரை, தற்போது பிஜேபியின் கொள்கை பரப்பு செயலாளர் போல வேலை செய்து வருகிறார்.
webdunia
 
சமீபத்தில் பேசிய அமைச்சர் பாலாஜி ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
 
இதையடுத்து தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார், அவர் ஒரு மல்யுத்த வீரர், மோடி ஒரு கதாநாயகன் என ஏகபோகமாக பாராட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டு போட்ட போடுங்க, போடாட்டி போங்க: தம்பிதுரை பேச்சால் அப்செட் ஆன அதிமுக