தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் செங்கோட்டையன் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பரப்புரையில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்களின் பெயரை மாற்றி சொல்லியும், கட்சியின் சின்னத்தை மாற்றி கூறியும் அக்கப்போர் செய்து வருகின்றனர்.
அப்படி திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கும் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டனர். ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கேட்காமல் அமைச்சர், குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார்.
பின்னர் பெற்றோர் இது ஆண் குழந்தை என கூறவே அவர் ராமச்சந்திரன் என்று மீண்டும் பெயர் சூட்டினார்.