மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்தியா டுடே தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், 70 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி பத்து இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில், 24 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் 20 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், 19 தொகுதிகளில் பாஜகவும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
பீகாரில் 32 தொகுதிகளை பாஜகவும், 8 தொகுதிகளை இந்தியா கூட்டணியும் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 26 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 22 தொகுதிகளில் பாஜகவும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் 17 தொகுதிகளையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.