இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார்.
வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
அவரது டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ்,ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால்,மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத்,விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன்,இயக்குனர் மோகன்.G , நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் நடிகர் ஜீவா பேசும்பொழுது ,
"கடந்த ஒரு வருடமாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்
மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் 'யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு 'டெப்ஃ ஃப்ராக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும்" என அனைவரையும் வரவேற்று பேசினார்.
சந்தோஷ் நாராயணன்
பின்னர் கில்லா.கே என்பவரின் சுயாதீன கலைஞரின் 'புரிய வை' பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் வெளியிட்டு பேசும்பொழுது தனது மிகப்பெரிய சுயாதீன பாடலாக 'என்ஜாய் என்ஜாமி' பாடல் அமைந்ததாகவும் தானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் ஜீவா போன்றவர்கள் மியூசிக் லேபிள் நிறுவனம் தொடங்கி இருப்பது ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பதற்கு உதவிஆக இருக்கும். பின்னர் ஜீவா போன்றவர்கள் இந்த துறையில் நுழைவது மகிழ்ச்சியடைகிறேன்.ஜீவா போன்ற வர்த்தக திறமை கொண்டவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் இருந்தால் சுயாதீன கலைஞர்களுக்கு வானமே எல்லை என்று கூறினார்.
தமிழ்நாட்டிலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயாதீன பாடல் கலைஞர்கள் இருப்பதாகவும் அவருடைய சிறு ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.
அவர்களுக்கான மேடையாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனம் அமையும் என்று வாழ்த்தினார்.