21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்.! திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை.!!

Senthil Velan
வியாழன், 14 மார்ச் 2024 (12:38 IST)
காங்கிரஸ் மற்றும் மதிமுகவிற்கான தொகுதிகள், திமுக வேட்பாளர்கள் பட்டியல் போன்றவற்றை குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன.
 
திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.

ALSO READ: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்..! ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல்..!!
 
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்தும், மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவம் எதிரொலி! பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! - அரசு பரிசீலனை!

துர்கா சிலை ஊர்வலத்தில் விபரீதம்.. 2 பக்தர்கள் பரிதாப பலி: மத்தியப் பிரதேசத்தில் சோகம்!

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்! கொதித்தெழுந்த எடப்பாடியார் கண்டனம்!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

இந்தியாவிலும் Gen Z போராட்டம் வெடிக்கும் அபாயம்? முறியடிக்கும் திட்டத்தை தயாரிக்கும் டெல்லி போலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments