பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக இருக்கும் நிலையில் ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக தான் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்த இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் தற்போது பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த கால ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்தை அதிமுக பறி கொடுக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.
வாக்கு சதவீதத்தை பொருத்தவரை திமுகவை அடுத்து பாஜக தான் இந்த முறை அதிகமாக இருக்கும் என்றும் திமுகவுக்கு 59 சதவீதமும் பாஜகவுக்கு 20 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் தொகுதிகள் வெற்றி என்று பார்த்தால் திமுகவுக்கு 36 தொகுதிகள் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் மற்றும் பாஜகவுக்கு ஒரு தொகுதி என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
கடந்த தேர்தலில் வெறும் மூன்று சதவீதம் வாக்கு வாங்கி மட்டுமே வைத்திருந்த பாஜகவின் வாக்கு வங்கி தற்போது உயர்ந்துள்ளதற்கு அண்ணாமலை தான் மிகப்பெரிய காரணம் என பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.