40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள்..! இபிஎஸ் அறிவிப்பு

Senthil Velan
சனி, 23 மார்ச் 2024 (12:08 IST)
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
மக்களவை தேர்தலில் வெற்றி பெற தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை தொடங்குகிறார்.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி, கோவை, நீலகிரிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூருக்கு செங்கோட்டையன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்சென்னைக்கு கோகுல இந்திரா, மத்திய சென்னை தொகுதிக்கு தமிழ் மகன் உசேன், விழுப்புரம், புதுச்சேரி தொகுதிகளுக்கு சி.வி.சண்முகம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..! ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிப்பு.!
 
தேனி, ராமநாதபுரத்துக்கு ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மற்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

ஜோதிமணி எம்பி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments