புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக பிரபலம் ஒருவர் இந்த இரு மாநிலங்களுக்கும் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுவை மட்டும் தெலுங்கானா மாநில கவர்னராக இருந்து தமிழிசை சௌந்தரராஜன் தேர்தலில் போட்டியிட போவதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் முன்னாள் தமிழக பாஜக பிரபலம் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கூடுதலாக புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே சி பி ராதாகிருஷ்ணன் புதுவை, தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஆளுநராக செயல்படுவார் என்றும் விரைவில் அதாவது தேர்தல் முடிவடைந்த உடன் தெலுங்கானா மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தனியாக கவர்னர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருவதை அடுத்து அந்த மாநிலத்தில் முன்னாள் பாஜக பிரபலம் ஒருவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதால் கவர்னர் மற்றும் முதல்வர் இடையே மோதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.