Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்..! பாஜக தேர்தல் அறிக்கை..! அண்ணாமலை..!!

annamalai

Senthil Velan

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (14:55 IST)
கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
 
பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டார். மேடையில் உள்ள அனைவரின் சாட்சியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
 
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் மையங்கள் திறக்கப்படும். விமான நிலைய விரிவாக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சர்வதேச விமான நிலையமாக கோவை விமான நிலையம் மாற்றப்படும், 
 
மெட்ரோ பணிகள் துரிதப்படுத்தப்படும், ஐ.ஐ.எம் (IIM) கல்வி நிறுவனம் கோவையில் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும், ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், நொய்யல் மற்றும் கௌசிகா நதிகள் புணரமைக்கப்படும்,
 
கைத்தறி நெசவுத் தொழில் மேம்பாட்டிற்கான பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டு சோலார் மின்தகடு பொருத்துவதற்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்,
 
தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் ஆகியவை கோவையில் அமைக்கப்படும், ராணுவ தளவாட உற்பத்தியில் செமி கண்டக்டர் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும், நான்கு நவோதயா பள்ளிகள் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் உருவாக்கப்படும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கிளை கோவையில் அமைக்கப்படும், 250 பிரதமர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்படும், தேசிய முதியோர் நல மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

கோவையில் இருந்து முக்கியமான புராதான இடங்களுக்கு புதிய 10 ரயில்கள் இயக்கப்படும், சபரிமலை யாத்திரை செல்பவர்களுக்கான உதவி மையம் உருவாக்கப்படும், புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான மையம், கர்மவீரர் காமராஜர் பெயரில் மூன்று உணவு வங்கிகள் ஆகியன உருவாக்கப்படும், கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும், அதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
 
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோவை சர்வதேச அளவில் தனித்துவமிக்க பகுதியாக உருவாக்கப்படுவதோடு, கோவையில் உள்ள தற்போதைய பிரச்சனைகள் மற்றும் வருங்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். 
 
கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டிறைச்சி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கிய பாஜக