Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம்..! அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

Annamalai

Senthil Velan

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (13:30 IST)
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10:40 மணிக்கு பிரச்சாரம் செய்வதற்காக அண்ணாமலை தாமதமாக வந்தார். 
 
இதைத்தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அண்ணாமலையை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என்று போலீஸாரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அண்ணாமலை அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது பாஜக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் இருவர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் அன்று விடுமுறை தராவிட்டால் சட்ட நடவடிக்கை! – தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் இயக்குனரகம் எச்சரிக்கை!