Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 1.25 லட்சம் தேர்தல் புகார்கள்..! தமிழ்நாட்டில் இவ்வளவு புகார்களா...?

Senthil Velan
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:46 IST)
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு சி விஜில் புகார் செயலி மூலம்  தமிழ்நாட்டில் 2,168 புகாரும் இந்தியா முழுவதும் 1,25,939 புகாரும் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் பணம்,  பரிசு பொருட்கள், தேர்தல் விதி மீறல், அனுமதி இல்லாமல் வீட்டு சுவற்றில் அரசியல் கட்சி சின்னம் வரைதல் உள்ளிட்ட புகார்களை மக்களே செல்போன் செயலி மூலம் புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள  செயலிதான் (சி விஜில்) செயலி. 
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு 16.3.24ம் தேதி முதல் 3.4.24 வரையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் (சி விஜில்) செயலியில் இந்தியா முழுவதிலிருந்தும் 1,25,939 புகாருகள் வந்துள்ளன. அதில் 1,25,939 புகார்கள் விசாரணை நடத்தி முடித்து வைக்கபட்டுள்ளது. 

புகார் வந்த 100 நிமிடத்தில் விரைந்து 1,13,481 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டதாகவும். தற்போது 388 புகார்கள் மட்டுமே விசாரணையில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் கூறியுள்ளது.
 
தமிழ்நாட்டில் 2,168 புகார்கள் வந்தத்தில் 2,139 விசாரணை நடத்தி நிவர்த்தி செய்திருப்பதாகவும், புகார் வந்த 100 நிமிடத்தில் விரைந்து செயல்பட்டு  1,071 புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டதாகவும், 29 புகார்கள் மட்டுமே தற்போது விசாரணையில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளது. 

ALSO READ: பதற்றமான வாக்கு சாவடிகள் எவை..! லிஸ்ட் வெளியிட்ட தேர்தல் அதிகாரி.!!
 
இதேபோல் இந்திய அளவில் மேகாலையாவில் குறைந்தபட்சமாக 6 புகார்களும்,  லாடாக், மிசோரம், யூனியன் பிரதேசங்களும் நாகாலாந்து மாநிலத்தில் ஒரு புகார்கள் கூட சி விஜில் புகார் செயலியில்  பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments