Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டம், பாட்டம், பூ , மத்தளம் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு என்ன வரவேற்பு ...

Advertiesment
ஆட்டம், பாட்டம், பூ , மத்தளம்  தமிழச்சி தங்கபாண்டியனுக்கு என்ன வரவேற்பு ...
, புதன், 10 ஏப்ரல் 2019 (15:54 IST)
அனைத்து கட்சிகளும் திவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் களை கட்டி உள்ளது. அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் 20- 20 தொகுதியில் போட்டியிடுகின்றன. அதிமுக - தேமுதிக, பாமக, பிஜேபி போன்ற கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்துள்ளது. 

திமுக காங்கிரஸ் மா-கம்யுனிஸ்டு, முஸ்லீம் லீக்  மதிமுக, விசி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
 
இந்நிலையில் தென் சென்னையில் திமுக சார்பில்  தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார், இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். இவர் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார்.
 
இன்று சென்னை மந்தைவெளி பகுதியில் வாக்கு சேகரிக்க தமிழச்சி தங்கபாண்டியன் சென்றார்.

அப்போது தொண்டர்கள் மத்தளம் அடித்து : ஆட்டம் ஆடி , மகிச்சியாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
 
பின்னர் தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு வீட்டிற்குச் செல்கிறார் சினிமானிவில் ஓபனிங் சீனில் ஹீரோவுக்கு மேலிர்ந்து பூக்களைத் தூவுவதைப் போல் மேல்மாடியிலிருந்து அவர் மீது பூக்களைத் தூவினர்.
 
மேலும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவாக அவரது தொண்டர்கள்  கோஷமெழுப்பியும், ஆதரவு தெரிவித்தும் ஜூஸ் கொடுத்தும் அமர்களப்படுத்திவிட்டனர்.

வாக்குகள் சேகரித்தவர் பின்னர் அப்பகுதியில் இருந்து ஆட்டோவில் ஏறிச் சென்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தி: “வயநாட்டில் டெபாசிட் வாங்கினாலே வெற்றிதான்”- யார் இவர்?