Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவு சரிவு – நான்காம் கட்டத்தில் 64 சதவீதம் !

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (09:30 IST)
நேற்று நடைபெற்ற நான்காம் கட்ட வாக்குப்பதிவில் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய வாக்குப்பதிவுகளை விட குறைந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து நடந்த மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கேரளா, குஜராத், அசாம், உத்தரபிரதேசம்  உள்ளிட்ட 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது அதன் பின்னர் நேற்று நான்காம் கட்டமாக மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

நேற்று பதிவான வாக்குப்பதிவு மற்ற மூன்று கட்டங்களை விட மிகவும் குறைந்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் 69.45 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 69.43 வாக்குகளும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 66 சதவீதம் வாக்குகள்  பதிவாகின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் வெறும் 64 சதவீதம் வாக்குகளே பதிவாகின.

மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்
பிகார்- 59.02 %
ஜம்மு & காஷ்மீர்-10.05 %
ஜார்க்கண்ட்- 64.38 %
மத்தியப் பிரதேசம்- 57.77 %
மகாராஷ்டிரம்- 72.34 %
ஒடிசா- 64.05 %
ராஜஸ்தான்- 58.56 %
உத்தரப் பிரதேசம்- 67.09 %
மேற்கு வங்கம்-76.66 %

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments