Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்காந்தின் ’அந்த’ டுவீட்: செம கடுப்பில் அதிமுக தரப்பு!!!

Advertiesment
விஜய்காந்தின் ’அந்த’ டுவீட்: செம கடுப்பில் அதிமுக தரப்பு!!!
, சனி, 6 ஏப்ரல் 2019 (11:39 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டுள்ள டுவீட் அதிமுகவிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் திமுக பொருளாளர் துரைமுருகன். கடைசியில் வேறுவழி இல்லாமல் 4 சீட்டுகளை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. இது விஜயகாந்த் கட்சிக்காக சேர்த்து வைத்திருந்த கொஞ்சநெஞ்ச பெயரையும் கெடுக்கும் செயலாக இருந்தது.
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தேனி நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் திரு.ராஜ்நாத் குமார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு தேனி அல்லிநகரம் பகுதியில்,தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாக்கு சேகரித்தார் என குறிப்பிட்டிருந்தார்.
 
தேனி வேட்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்! ஆனால் குறிப்பிட்டுள்ளதோ ராஜ்நாத்குமார்! இந்த டுவீட்டை விஜயகாந்த போட்டிருக்க மாட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் போட்டிருப்பர். வேட்பாளர் பெயரையே அதுவும் துணை முதல்வர் மகனின் பெயரையே மாற்றி குறிப்பிட்டிருப்பது அதிமுக தரப்பை வருத்தமடைய செய்துள்ளதாம்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் பாதுகாப்பு – 150 துணை ராணுவ கம்பெனிகள் தமிழகம் வருகை !